திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகேவுள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி (55). இவர், ஊர் ஊராக சென்று குறி பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 6 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 10-குழந்தைகள் உள்ளது. அவரது ஆவது மகன் அஜித் (22). இவரும், தனது தந்தையின் தொழிலயே செய்து வருகின்றார். இந்நிலையில் மகன் அஜித் இன்று (ஆக. 27) மாலை உசிலம்பட்டியிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டிலிருந்த தந்தை அந்தோணியுடன் குடிபோதையில் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அருகே இருந்த கத்தியால் தந்தை அந்தோணியை அஜித் குத்தியுள்ளார். அப்போது, குடிபோதையில் இருந்த தந்தை அந்தோணி காயத்துடன் மகனை எட்டி உதைத்ததால், நிலைதடுமாறி கீழே விழுந்த மகனின் கையிலிருந்த கத்தியை பிடுங்கி மகனை சராமாரியாக குத்தியுள்ளார்.