திண்டுக்கல் அருகே கொடைக்கானல் நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் விற்பனை குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் கொடைக்கானல் காவல் துறை சார்பில் மேல்மலை மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் இன்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேல் மலைப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் திரிந்த சிலரை விசாரித்தனர். அப்போது மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த வைரவேல், லட்சுமணன் , மதன்குமார் மற்றும் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ், கவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன், மேலும் கேரள மாநிலத்தை சேர்ந்த சரத் குமார் ஆகியோர் கஞ்சா மற்றும் போதை காளான் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.