தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழப்பு - 5 member died in dindugal highways

திண்டுக்கல்:  கொடைரோடு அருகே இரு கார்கள் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

5 member died in car smashed accident at dindugal highways
திண்டுக்கல் கார் விபத்து

By

Published : Jan 25, 2020, 9:20 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திண்டுக்கல் நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று சைக்கிளில் சாலையை கடக்கமுயன்ற முதியவர் மீது மோதியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பைக் கடந்து எதிரே உள்ள சாலையில் நுழைந்தது.

நிலைதடுமாறி சென்ற அந்தக் கார், திருநெல்வேலி நோக்கி சென்றுகொண்டிருந்த மற்றொரு காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டுக்கல் கார் விபத்து

மேலும், சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற முதியவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காரில் பயணித்த மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அம்மைய நாயக்கனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details