திண்டுக்கல் பகுதியில் கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் திண்டுக்கல் வட்டார காவல் ஆய்வாளர் தெய்வம், உதவி ஆய்வாளர் அழகுபாண்டி ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் சிறுமலைப்பிரிவு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிறுமலை அடிவாரம் மலை மாதா கோயில் செல்லும் வழியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ரெண்டல்லப்பாறையைச் சேர்ந்த யோவான்(41) என்பதும், சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், வட்டார காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.