தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் பொதுமக்களை பட்டாக்கத்தியால் தாக்கிய இருவர்; 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் நகரில் குடிபோதையில் பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் வெட்டியதில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிசிடிவி
சிசிடிவி

By

Published : Jun 22, 2022, 2:19 PM IST

திண்டுக்கல்:கோவிந்தாபுரத்தில் நேற்று (ஜூன்21) இரண்டு இளைஞர்கள் பட்டா கத்தியுடன் தேனீர் கடைகளில் மிரட்டி சிகரெட் வாங்கியுள்ளனர். . அதிகாலை 5 மணி முதல் பழனி சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் வேலை செய்யும் ஒருவரை அவர்கள் தாக்கி பணம் பறித்துள்ளனர்.

தொடர்ந்து நந்தவனம் ரோடு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்துள்ளனர். மேலும் சாலையில் அதிகாலை செய்தித்தாள் விநியோகம் செய்தவரை தாக்கி கையில் இருந்த கத்தியால் வெட்டியுள்ளனர். இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதைக் கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

மளிகைக் கடையில் பட்டா கத்தியுடன் அடாவடி செய்த இளைஞர்கள்

தொடர்ந்து ஆர்எம் காலனியில் ரோந்து பணியில் இருந்த காவலர் சம்ப இடத்திற்கு சென்று பிடிக்க முயன்றபோது இருவரில் ஒருவரை பிடித்தனர். பின் போலீசார் அவரை, நகர் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர் மருதாணி குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பதும் மற்றொருவர் மொட்டனம்பட்டியைச் சேர்ந்த கோகுல் என்பதும் தெரியவந்தது.

மேலும், தப்பி ஓடியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த இரண்டு இளைஞர்கள் வெட்டியதில் காயமடைந்த 2 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்டுக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details