தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் பழனியில் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு - பழனி பஞ்சாமிர்தம்

பழனியில் எடப்பாடியை சேர்ந்த ஸ்ரீ பருவதராஜகுலம் திருவிழாக் குழு சார்பில் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு வழங்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு
15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு

By

Published : Feb 12, 2023, 1:15 PM IST

15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்கு சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பருவதராஜகுல சமூகத்தைச் சேர்ந்த மீனவ மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். இவர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்து வந்து மலை மீது ஒரு நாள் தங்கியிருந்து முருகனை வழிபாடு செய்ய உள்ளனர்.

இந்த வழக்கம் கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பழனி மலைக்கோயிலில் இரவு பத்து மணிக்கு மேலாக பக்தர்கள் யாரும் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. தைப்பூசத் திருவிழாவிற்காக எடப்பாடியில் இருந்து வரக்கூடிய மீனவ சமுதாய மக்கள் மட்டும் இரவு நேரத்தில் தங்கி வழிபட பாரம்பரிய முறைப்படி கோயில் நிர்வாகம் அனுமதிப்பது பக்தர்களால் சிறப்பாக கருதப்படுகிறது.

இந்த எடப்பாடி பக்தர்கள் 15 டன் அளவிற்கு பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக 12 டன் மலை வாழைப்பழம், 300 மூட்டை நாட்டுச்சக்கரை, 50 மூட்டை பேரிச்சம்பழம், நெய், தேன், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று (பிப் 12) மலைமீது இரவு தங்கும் எடப்பாடி பக்தர்கள் முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். எடப்பாடியில் இருந்து பாதயாத்திரையாக காவடி சுமந்து வரும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் நடை பயணமாகவே தங்கள் ஊர்களுக்கு செல்வதையும் வழக்கமாககொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: வீடியோ: சிருங்கேரி ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

ABOUT THE AUTHOR

...view details