தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்றோரின் அலட்சியம்: 11 மாத பெண் குழந்தை உயிரிழப்பு! - விபத்தில் சிக்கிய குழந்தை

திண்டுக்கல்: 11 மாத பெண் குழந்தையை இருசக்கர வாகன பெட்ரோல் டேங்கின் மீது அமர வைத்து பயணித்த பெற்றோர்களின் அலட்சிய போக்கால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அபாயகரமான வளைவு
அபாயகரமான வளைவு

By

Published : Aug 19, 2020, 2:41 AM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள அழகாபுரியை சேர்ந்த தம்பதியினர், கனகராஜ் மற்றும் சித்ரா தேவி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 11 மாதத்தில் மேகா என்ற பெண் குழந்தை உள்ளார். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கனகராஜ் மின்பொறியாளராக வேலை செய்து வருகிறார். கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான அழகாபுரிக்கு வந்தார்.

இந்நிலையில், உறவினரின் துக்க நிகழ்வுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக16) கனகராஜ் சென்றுள்ளார். அப்போது கனகராஜ் தனது குழந்தை மேகாவை இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங் மீதும், அவரது மனைவியை வாகனத்தின் பின்பகுதியிலும் அமர வைத்து பயணித்துள்ளார்.

சீலநாயக்கன்பட்டி அருகேயுள்ள அபாயகரமான வளைவில் சென்றபோது குழந்தை மேகா பெட்ரோல் டேங்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த குழந்தையை உடனடியாக வேடசந்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அபாயகரமான வளைவு

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 17) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பொதுமக்களிடம் பலமுறை அரசு மற்றும் காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு செய்தும் பெற்றோர்கள் கவனக் குறைவாகவே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க:400 கி.மீ பயணம்...கரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த ஆண் குழந்தை!

ABOUT THE AUTHOR

...view details