தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எங்கே போனது தமிழ் மொழி -  திமுக எம்பிக்கு ட்வீட் செய்த இளைஞர்! - youth tweeted to mp for tamil language support

தருமபுரி: ரயில் நிலைய முன்பதிவு மைய திரையில் தமிழ்மொழி இல்லை என ஒரு நபர் திமுக மக்களவை உறுப்பினருக்கு ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்கே போனது தமிழ் மொழி

By

Published : Sep 5, 2019, 4:26 PM IST

Updated : Sep 5, 2019, 4:40 PM IST

தருமபுரி ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு வழங்கும் இடத்தின் அருகில் வைக்கப்பட்டுள்ள தொடுதிரையில் முன்பதிவு நிலவரம் உள்ளிட்ட விபரங்களை பார்க்கும் வகையில் திரை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதனை நிர்மல்குமார் என்பவர் புகைப்படத்தோடு தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

டிவீட் பதிவு

அவர் செய்த பதிவில் "தமிழ் இல்லாமல் தமிழ்நாட்டில் ஓர் இடம் தர்மபுரி இரயில் நிலையம்" எனக் குறிப்பிட்டிருந்தார். தருமபுரி ரயில் நிலையமானது பெங்களூரு ரயில்வே கோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தில் இங்கு வழங்கப்படும் பயணச்சீட்டுகள் தற்போது வேற்று மொழியில் மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

மக்களவை உறுப்பினர் செந்தில்குமார்

இதுகுறித்து தருமபுரி மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமாரிடம் கேட்டபோது, பயணச்சீட்டு வழங்கும் திரையில் தமிழ்மொழி இல்லாதது குறித்து தருமபுரி ரயில் நிலைய அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதற்கு தருமபுரி ரயில் நிலையமானது கர்நாடக மாநிலம் ஹூப்ளி சர்வரில் இணைக்கப்பட்டுள்ளது என்று பதில் அளித்ததாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ் மொழி இல்லாத விவகாரம் குறித்து ஹூப்ளி டிஆர்எம்-க்கு தொடுதிரையில் தமிழ்மொழி இடம்பெற வேண்டும் எனக் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறினார்.

Last Updated : Sep 5, 2019, 4:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details