ஒகேனக்கல் அடுத்துள்ள ஊட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (21). கர்நாடக அணைகளில் இருந்து 3 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்தத் தண்ணீர் அஜித்தின் நிலத்தின் அருகே உள்ள நிலங்களில் புகுந்து காணப்பட்டது.
காவிரி நீரை நிலக்கடலைக்கு பயன்படுத்திய அஜித்! - first time
தருமபுரி: ஒகேனக்கல் அருகே இளைஞர் ஒருவர் காவிரி ஆற்றின் கரையோத்தில் வந்து கொண்டிருந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தினார் .
WATER
அதை தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை செடிக்கு பயன்படுத்தும் வகையில் கால்வாய் அமைத்து தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டார். காவிரி ஆற்றில் எத்தனை லட்சம் கன அடி தண்ணீர் வந்தாலும், அதை தருமபுரி மாவட்ட மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையே உள்ளது.
இந்நிலையில், இந்த இளைஞன் வாடிய நிலையில் இருந்த செடிக்கு காவிரி நீரைக்கொண்டு வாய்க்கால் அமைத்து தண்ணீர் பாய்ச்சிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது.