தர்மபுரி : அரூரை சேர்ந்தவர் ரவி என்பவரின் மகன் வெற்றிவேல். இவர் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் நாட்டு வைத்தியம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
தர்மபுரி மற்றும் சேலம் சுற்றுவட்டார மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயங்களை கடைகளில் கடை உரிமையாளா்கள் வாங்குவது இல்லை, செல்லாது என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தங்கள் பகுதியில் 10 ரூபாய் நாணயங்களை அரூா் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாட்டு பொருளாகப் பயன்படுத்தி விளையாடிய நிகழ்வு வெற்றிச்செல்வனின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வழங்கும் பத்து ரூபாய் நாணயத்தை செல்லாது எனப் பரவலாக பேசப்பட்டு வருவதைத் தவிர்த்து அனைவரையும் பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் 10 ரூபாய் நாணயங்களை சிறிது சிறிதாக சேர்த்து தான் ஒரு சொகுசு காரை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டார்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கோயில், வணிக வளாகங்கள், கடைகள், சாலையோர கடைகள் என பல பகுதிகளிலும் இந்த நாணயத்தை சேகரித்துள்ளார். பின்னர் பத்து ரூபாய் நாணயங்களை மூட்டை மூட்டையாக கட்டி கார் வாங்குவதற்காக சேலம் சென்றார்.
சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபல கார் நிறுவனத்திற்கு வந்த அவர் தான் சேர்த்து வைத்த 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து கார் வாங்க விரும்புவதாக தெரிவித்தார். கார் நிறுவன அலுவலர்கள் வங்கி அலுவலர்களுடன் கலந்தாலோசித்த பிறகு கார் வழங்க முன்வந்தனர்.
10 ரூபாய் நாணயங்களை கொட்டிக் கொடுத்து கார் வாங்கிய இளைஞர்! இதனையடுத்து சரக்கு வாகனத்தில் மூட்டை மூட்டையாக கொண்டுவந்த 10 ரூபாய் நாணயத்தை தனது உறவினருடன் எடுத்துச் சென்று கார் நிறுவன வளாகத்தில் கொட்டி அதை பிரித்துக் காண்பித்து ஆறு லட்ச ரூபாயை பத்து ரூபாய் நாணயமாக வழங்கினார்.
ஆறு லட்ச ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து கார் வாங்கிய இளைஞர்! இதனையடுத்து அவர் தேர்வு செய்த காருக்கான சாவியை கார் நிறுவன அலுவலர்கள் வழங்கினர். இன்றைய காலகட்டத்தில் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணயம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசு சார்பில் அச்சடிக்கப்பட்ட இந்த காசு செல்லாதது அல்ல என்பதை பொதுமக்கள் உணரும் வகையிலும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டு கார் வாங்கியதாகவும் இதற்காக பல மாதங்கள் போராடி 10 ரூபாய் நாணயங்களை சேர்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :குறைந்த 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. அதிகரித்த 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்...