மனதை ஒருநிலைப்படுத்துங்கள்! காவலர்களுக்கு 'யோகா' - Dharmapuri
தருமபுரி: உலக யோகா தினத்தை முன்னிட்டு தருமபுரியில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
எஸ்பி தலைமையில் காவலர்களுக்கு யோகா பயிற்சி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் காவலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இப்பயிற்சியை, யோகா இயற்கை வாழ்வியல் மருத்துவர் ரமேஷ்பாபு பயிற்றுவித்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் யோகா பயிற்சி செய்தனர்.