தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மீண்டும் பாரத பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள திமுக கட்சியை சேர்ந்த டாக்டர் செந்தில் குமாருக்கும் வாழ்த்துக்கள்.
'தோற்றாலும் நல்ல திட்டங்களை கொண்டு வர பாடுபடுவோம்' - அன்புமணி! - people
தருமபுரி: "ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வருவோம்" என்று தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வியை தழுவிய அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
நாங்கள் ஆட்சியில் இல்லை என்றாலும் 10 அம்ச கோரிக்கையை முன்னெடுத்து மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வருவோம். ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை மத்திய மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து திட்டத்தை நிறைவேற்றுவோம். பாமகவிற்காக ஓட்டு போட்டு போட்ட மக்களுக்கு நன்றி" என்றார்.