தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒகேனக்கல்லில் நீர்வரத்து : 5 ஆயிரத்து 500 கன அடியாக உயர்வு! - கன அடியாக உயர்வு

தருமபுரி : ஆம்பன் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் நீரளவு 5 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது.

Waterfall in hogenakkal  5 thousand 500 cubic feet increase
ஒகேனக்கல்லில் நீர்வரத்து : 5 ஆயிரத்து 500 கன அடியாக உயர்வு!

By

Published : May 20, 2020, 7:29 PM IST

ஆம்பன் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், அரூர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. பென்னாகரம் சுற்றுவட்டாரம், காவிரி கரையோர பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு நீர்வரத்து 4300 கன அடி அளவுக்கு தண்ணீர் உயர்ந்தது. காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்து 5500 கன அடியாக இருந்தது.

ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் மற்றும் காவிரிக் கரையோர பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து : 5 ஆயிரத்து 500 கன அடியாக உயர்வு!

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வருவோருக்கும் தற்போது அருவியில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளுடன் பரிசல்களை இயக்க வழங்கப்பட்ட அனுமதிக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :ஆம்பன் சூறாவளி புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details