கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அம்மாநில அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், அதிகப்படியான நீரை காவிரி ஆற்றில் கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. அதன்படி நேற்று(ஆகஸ்ட்-8) கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 90 ஆயிரம் கன அடி நீர், இன்று மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.
தமிழகத்திற்கு வந்த காவிரித்தாய்..! - நீர் திறப்பு
தர்மபுரி: கபினி அணையில் திறந்து விடப்பட்ட காவிரி நீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.
ஒகேனக்கல் நீர்வரத்து உயர்வு!
மேலும் ஒகேனக்கல்லில், நீர்வரத்து நள்ளிரவுக்குள் 50 ஆயிரம் கன அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ளது. மேலும் நீர்வரத்து காரணமாக பாதுகாப்புப் பணியில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை சார்ந்த அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Aug 9, 2019, 6:23 PM IST