கர்நாடக மாநிலத்தில் காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை.19) கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2,026 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 13,500 கன அடி நீரும் என மொத்தம் 15,526 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. அதில் 18 ஆயிரம் கன அடி நீர் இன்று தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைந்தது.