தருமபுரி மக்களவைத் தொகுதி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டப்பேரவைத் தொகுதி என மொத்தம் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. அதில் காலியாக உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தொகுதிகளில் உள்ள 14 லட்சத்து 84 ஆயிரத்து 27 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 1787 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் இந்த வாக்குச்சாவடிகளில் மொத்தம் 2,623 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி முன்னிலையில், தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.
மேலும் இந்தத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் 460 கேரளா மாநிலக் காவலர்கள், ஐந்து பட்டாலியன் காவலர்கள், 520 முன்னாள் படைவீரர்கள், 370 ஊர்க் காவல் படையை சேர்ந்த வீரர்கள், 2600 மாவட்டக் காவல் துறையைச் சேர்ந்த வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குபெட்டியகளை அனுப்பும் பணி தொடக்கம்