தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜல்லிக்கட்டு; 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு! - viruthunagar jallikattu

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று (பிப்.24) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றனர்.

viruthunagar-jallikattu-competition
viruthunagar-jallikattu-competition

By

Published : Feb 24, 2021, 9:44 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி கிராமத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியை துணை ஆட்சியர் தினேஷ்குமார் தொடங்கிவைத்தார். காலை சுமார் 9 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

முன்னதாக போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சுமார் 300 காளைகள் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து ஒரு மணி நேர இடைவேளையில் மாறி மாறி காளைகளை பிடித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜல்லிக்கட்டு

போட்டி தொடங்குவதற்கு முன்பு துணை ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி நிகிழ்ச்சியில் வீரர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பாஜகவிடம் விலைக்குச் சென்றவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- திருமாவளவன்!

ABOUT THE AUTHOR

...view details