தருமபுரி அடுத்த குப்பூர் ஊராட்சியில் பெரிய குரும்பட்டி கிராமத்தில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராம மக்களின் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்துள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டு குரும்பட்டி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்த கிராம மக்கள் குடிநீருக்காக சுமார் ஐந்து கிமீ தூரம் நடந்துசென்று பனந்தோப்பின் ஒகேனக்கல் குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீரை எடுத்து வந்துள்ளனர். இந்த குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களிடமும் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் அரசுத் தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.