தருமபுரி மாவட்டம் ஐருகு பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரின் மகன் முனுசாமி(25). இவர்கள் இருவரும் ஒகேனக்கல் பண்ணப்பட்டி அருகே உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கி கொண்டு முனுசாமியை சரமாரியாக சுட்டுள்ளனர். இதன்காரணமாக முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒகேனக்கல் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொலை
தருமபுரி: ஓகேனக்கல் பகுதியில் வாலிபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மர்ம நபர்கள் வனப்பகுதிக்குள் தப்பியோடியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொலை
இதனை தொடர்ந்து பாலு கூச்சலிட்டுள்ளார். அதனால் பயந்து போன மர்ம நபர்கள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து வந்து தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.