தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக வேண்டும் - செந்தில்குமார் எம்.பி., - Dharmapuri MP

உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சா் ஆக வேண்டும் என்பது என் தனிபட்ட ஆசை என தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

உதயநிதிஸ்டாலின் விரைவில் அமைச்சா் ஆக வேண்டும் - எம்.பி.செந்தில்குமார் பேட்டி .
உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சா் ஆக வேண்டும் - எம்.பி.செந்தில்குமார் பேட்டி .

By

Published : May 8, 2022, 6:59 AM IST

தர்மபுரி:இரண்டரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை தர்மபுரி மக்களவை உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார் நேற்று (மே 7) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில்குமார் எம்.பி., “கடந்த இரண்டரை ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது என மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, கரோனா தொற்று பரவல் மற்றும் பல்வேறு காரணங்களால் தாமதமானதாக தெரிவித்தனர்.

மேம்பால பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து அறிவுறுத்தியதால், தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூன் இரண்டாவது வாரத்தில் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும். கட்டப்பட்டு வரும் மேம்பாலம் வருங்காலத்தில் ரயில் பாதை விரிவாக்கம் செய்யும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.

தர்மபுரி ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி ஏற்பாடு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. லிப்ட் வசதி அமையும்போது, முதியோர்கள் ரயிலில் சிரமமின்றி பயணம் செய்ய முடியும். தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகளை மேற்கொள்ள நில அளவை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிகள் நடைபெறும். எட்டு கி.மீட்டர் புதிய ரயில் பாதை அமைக்க இருந்த நிலையில், திட்டத்தில் ஐந்து கி.மீட்டர் ரயில் பாதையாக குறைத்து ரயில் திட்டம் நிறைவேற்றும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சா் ஆக வேண்டும் - எம்.பி.செந்தில்குமார் பேட்டி .

தரமில்லாத சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் பிளாக் லிஸ்டில் வைக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தர்மபுரி, ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உலக அளவிலான எலக்ட்ரானிக் பொருள்களின் உற்பத்தி மையமாக அமைய உள்ளது. அமைச்சர் பதவி முதலமைச்சர் பார்வையில் உள்ளது. ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் சிறப்பாக வேலை செய்து வருகிறார்.

ஒரு தொகுதியிலேயே அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுமக்களுக்காக வேலை செய்து வருகிறார். அமைச்சர் பதவி வழங்கினால் அனைத்து தொகுதிகளுக்கும் செய்ய ஒரு வாய்ப்பாக இருக்கும். இது என் தனிப்பட்ட கருத்து, அனைத்து முடிவுகளும் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ளது. சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு, மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் பாஜக செய்த போராட்டங்கள் மக்கள் நினைவில் இருக்கும். மக்கள் தற்போது கேஸ் அடுப்பை விட்டு விட்டு, விறகு அடுப்பு நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:காதலனுடன் சேர்த்து வைக்க கூறி நிறைமாத கர்ப்பிணி தர்ணா..!

ABOUT THE AUTHOR

...view details