தருமபுரி: அரூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா (23), மற்றும் +2 தேர்வு எழுதி முடித்த மாணவன் அம்பேத் செல்வன் ஆகிய இருவரும் அவருடைய உறவினர்களுக்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக் வாங்கிக் கொண்டு, ரவுண்டானாவில் இருந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அப்போது அரூர் பேருந்து நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதன் பின்னர் இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்தனர். பின் தகவலறிந்த விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டனர். பின்னர் முதலுதவிக்காக பரிசோதித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.