தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்மபுரியில் ரூ.2,95,000 பறிமுதல்! - Two lakh 95 thousand rupees were confiscated by the flying troops in Dharmapuri

தர்மபுரியில் ரூ.2,95,000 பறிமுதல் செய்யப்பட்டது.

Two lakh 95 thousand rupees were confiscated by the flying troops in Dharmapuri
தர்மபுரியில் இரண்டு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

By

Published : Mar 1, 2021, 8:24 AM IST

தர்மபுரி: தொப்பூர் சுங்கச்சாவடி அருகே தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சக்திவேல் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சேலத்திலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்தச் சோதனையின்போது, அந்தக் காரில் 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அந்தத் தொகையை பறக்கும் படையினர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சார் ஆட்சியர் பிரதாபிடம் ஒப்படைத்தனர்.

தர்மபுரியில் ரூ.2,95,00 பறிமுதல்!

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சார் ஆட்சியர் பிரதாப், “பறக்கும் படையினர் சோதனையில் 2 லட்சத்து 95 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால், பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சத்து 95 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட பேக்கரி உரிமையாளர் சிவன், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.

இதையும் படிங்க :கேள்விகேட்க முடியாமல் வெளிநடப்பு செய்வது தான் எதிர்க்கட்சியினர் வேலை - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details