தர்மபுரி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 29 வரை, 17 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இதில், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி செந்தில்குமார் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை அவர் பதிவு செய்துள்ளார். அது வைரல் ஆகி வருகிறது.
அதில், “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29ஆம் தேதி வரை நடக்கிறது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றம் பார்வையாளர்களுக்கான பாஸ் வழங்கப்படுகிறது. சபை நடவடிக்கைகளை பார்க்க ஆர்வம் உள்ளவர்களுக்கு பாஸ் ஏற்பாடு செய்ய, எனக்கு #parliamentpass என்ற ஹேஷ்டேக் அனுப்பவும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.