தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மீண்டும் அதிமுக வெற்றிபெற தொண்டா்கள் பாடுபட வேண்டும்' - கே.பி.அன்பழகன் - மீண்டும் அதிமுக வெற்றிபெற

தருமபுரி: அதிமுகவில் மாற்று கட்சியை சேர்த்தவர்கள் இணையும் விழா உயர்கல்வி, வேளாண்மைத் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்

By

Published : Jan 3, 2021, 9:36 PM IST

தருமபுரி மாவட்டம் மொரப்பூா் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனா்.

அதிமுகவில் மாற்று கட்சியை சேர்த்தவர்கள் இணையும் விழா - - கே.பி.அன்பழகன்
தருமபுரியில் அரூா் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூா் இருமத்தூா், ஈச்சம்பாடி, ஜக்குபட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, கருவேலம்பட்டி, வன்னியகுளம் உள்ளிட்ட ஊராட்சிகளிலிருந்து திமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியினா் அதிமுகவில் இணையும் விழா அமைச்சா் கே.பி.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.
அதிமுகவில் மாற்று கட்சியை சேர்த்தவர்கள் இணையும் விழா

இணைப்பு விழாவில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சா் முன்னிலையில் 500 போ் அதிமுகவில் இணைந்தனா்.

'மீண்டும் அதிமுக வெற்றிபெற தொண்டா்கள் பாடுபட வேண்டும்' - கே.பி.அன்பழகன்


இணைப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் கே.பி.அன்பழகன், "இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திவரும் முதலமைச்சர் இனி வரும் காலங்களில் தொடர வருகின்ற 2021ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக வெற்றிபெற தொண்டா்கள் பாடுபட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:பெரியார், அண்ணா, திராவிட இயக்கம் குறித்து குரூப் 1 தேர்வில் இடம்பெற்ற கேள்விகள்

ABOUT THE AUTHOR

...view details