தர்மபுரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக ஒகேனக்கல் விளங்குகிறது. கர்நாடக அணைகளில் இருந்து வரக்கூடிய உபரிநீர் ஒகேனக்கல் வழியாகவே மேட்டூர் அணை சென்றடைகிறது. இந்நிலையில், தற்போது ஒகேனக்கல் வரக்கூடிய தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துள்ளதால் அருவிகளில் குறைந்த அளவிலான நீரே கொட்டுகிறது. அதுதவிர மற்ற இடங்கள் அனைத்தும் பாறைகளாக காட்சியளிக்கின்றன.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைவு - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
தர்மபுரி: ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர்வரத்து சரிவடைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக ஏமாற்றம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் சுமார் 50 ஆயிரம் கனஅடி வரை ஒகேனக்கல்லுக்கு வந்தது.
ஆனால் இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் ஓனேகல்லுக்கான நீர்வரத்து 500 அடிக்கும் குறைவாகவே உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் கர்நாடக அரசிடம் வலியுறுத்தி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை பெற்று தர வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.