தர்மபுரி:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரண்டு மாதங்களாக நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் வந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, சுற்றுலாப் பயணிகள் அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கத் தடை விதித்திருந்தார்.
தற்போது நீர்வரத்து படிப்படியாக குறைந்து 16 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிப்பகுதியில் குளிக்கவும், மாமரத்து பள்ளம் வழியாக பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்டம் நிர்வாகம் இன்று (அக்.4) அனுமதி அளித்துள்ளது.
பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி இரண்டு மாத இடைவெளிக்குப்பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மசாஜ் செய்து கொண்டு, மெயின் அருவியில் குளித்தும் தொங்குபாலத்தில் இருந்து காவிரி ஆற்றைப்பார்த்து ரசித்தும் மகிழ்ந்தனர்.
இன்றும் நாளையும் ஆயுத பூஜை, தசரா தின விடுமுறை என்பதால் கர்நாடகா மாநிலத்தைச்சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச்சார்ந்த சுற்றுலாப் பயணிகளும் தங்கள் விடுமுறையைக் கொண்டாட ஒகேனக்கலில் குவிந்துள்ளனர். குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளும் சுற்றுலாவை நம்பி உள்ள தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சை பெற வந்த பெண் - மருத்துவர்கள் அதிர்ச்சி