தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம் தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாநிலத் தலைவர் அன்பரசு தலைமையில் காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதுமிருந்து பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,
- அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையான 17பி குற்றச்சாட்டு காரணமாக தற்காலிக பணிநீக்க உத்தரவு, பணியிட மாறுதல், பதவி உயர்வு மாறுபாடுகள், பணி ஓய்வு மறுப்புகள் ஆகியவற்றை ரத்துசெய்ய வேண்டும்,
- இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் ஆதிசேஷையா தலைமையிலான பணியாளர் சீரமைப்புக் குழு பரிந்துரையை ரத்துசெய்ய வேண்டும்,
- தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள நான்கு லட்சம் பணியிடங்களை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும்