தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்மபுரியில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு! - இரண்டாம் நிலை காவலர்

தர்மபுரி: இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

police
police

By

Published : Jul 26, 2021, 5:24 PM IST

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் காவல் துறை சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடைப்பெற்றது.

இந்த தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வாக உடல்தகுதி தகுதி தேர்வு தமிழ்நாட்டில் இன்று (ஜூலை.26) நடைபெற்று வருகிறது.

காவலா் பணிக்கான உடல் தகுதி தேர்வு

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான உடல்தகுதி தேர்வு இன்று சேலம் டி.ஐ.ஜி மகேஸ்வரி மேற்பார்வையில் தர்மபுரி மாவட்ட காவல் கணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் இன்று (ஜூலை.26) தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இந்த தேர்வில் கலந்துகொள்ள 999 பெண்கள் உள்பட 4 ஆயிரத்து 257 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை போலீசாருக்கு இனி சுழற்சி முறையில் வார விடுமுறை!

ABOUT THE AUTHOR

...view details