தருமபுரி மாவட்டம், இண்டூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தருமபுரி மாவட்டம், இண்டூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக அரசு பதவிகளில், தமிழக இளைஞர்களுக்கு 100% வேலை வாய்ப்பும் மத்திய அரசு பதவிகளில் 90% வேலை வாய்ப்பும், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பெரு நிறுவனங்களிலும் 90%வேலை வாய்ப்பு உறுதி சட்டம் இயற்ற வேண்டும். இந்த சட்டத்தை வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி கோட்டையை நோக்கி மாபெரும் கோரிக்கை பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2011 இல் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவகங்களில் 60,000 பணியாளர்கள் தேர்வாகியுள்ளனர். ஆனால் இதில் தமிழர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் தருணத்தில், தருமபுரி- மொரப்பூர் ரயில்பாதை திட்டத்தை பற்றி அறிவிப்பார்கள். ஆனால், இம்முறை அந்த திட்டத்தை செயல் படுத்தினால் நன்றாக இருக்கும். தேர்தல் காலங்களில் வாக்குகளை அறுவடை செய்ய வெற்று திட்டங்களை அறிவிக்காமல் நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.