நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையோட்டி பல்வேறு கட்சிகளும் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் ஒரே பெண் வேட்பாளரான நாம் தமிழர் கட்சியின் ருக்மணி தேவி, நல்லம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
நாம் தமிழர் கட்சியின் தருமபுரி வேட்பாளர் ருக்மணி தேவி பிரத்யேக பேட்டி! - ஈ டிவி பாரத்
தருமபுரி : நாடாளுமன்ற உறிப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தருமபுரி மாவட்ட தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும் என தருமபுரி மாவட்ட நாம் தமிழர் வேட்பாளர் ருக்மணி தேவி நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அப்போது நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “தருமபுரி மாவட்ட மக்களின் முக்கிய தொழில் விவசாயம். விவசாய தொழில் தற்போது அழிந்து கொண்டு வருகிறது. இதற்கு காரணம் தண்ணீர் பற்றாக்குறைதான். விவசாயத்திற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை இவ்வாறு முக்கியத்துவம் தராமல் சென்றால் உணவு பஞ்சம் ஏற்படும் என்றும் தருமபுரி மாவட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை மற்றும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனை நான் நாடாளுமன்றஉறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் முற்றிலுமாக தீர்க்கப்படும். அனைவருக்கும் பாதுகக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்குவோம். படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்” என தெரிவித்தார்.