தருமபுரி: பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (27), ‘நாட்டுத்துப்பாக்கி’ மற்றும் ‘ஏர்கன்களை’ வைத்துக் கொண்டு கடந்த மூன்றாம் தேதி 12 மணி அளவில் தமிழ்நாடு கர்நாடகா எல்லை பகுதிகளான ஒகேனக்கல் மற்றும் ஆலம்பாடி துறை, செங்கப்பாடி பகுதிகளில் தனது நண்பர்களான நல்லாம்பட்டியை சேர்ந்த மருத்துவர் கவின்குமார் (27) மற்றும் விக்னேஷ் (25) ஆகியோருடன் சுற்றித்திரிந்துள்ளனர்.
வனப்பகுதியில் விலங்குகளை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த கேமரா இவர்கள் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிவதை புகைப்படம் எடுத்துள்ளது. இந்த புகைப்படத்தை வைத்து கர்நாடக மாநிலம் கோபிநத்தம் வனச்சரக அலுவலர்கள் மாரிமுத்துவை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் மறைத்து வைத்திருந்த ஒரு ‘நாட்டுத்துப்பாக்கி’ மற்றும் ஒரு ‘ஏர்கன்‘ ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.