தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய திருடர்களுக்கு தீவிர வலைவீச்சு - திருடர்

தருமபுரி: வாகன திருட்டில் ஈடுபட்ட திருடர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் அவர்களை காவல்துறையினர் கோட்டைவிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police station

By

Published : Jun 1, 2019, 7:41 AM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளி கிராமத்தைச் சேரந்தவர் கார்த்தி. இவரின் இருசக்கர வாகனம் ஒரு மாதத்திற்கு முன்பு திருடு போனது. வாகன திருட்டு தொடர்பாக காரிமங்கலம் காவல்நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் பொம்மஅள்ளியில் நடந்த கோயில் திருவிழாவிற்கு திருட்டு பைக்குடன் வந்த இருவரை பொதுமக்கள் பிடித்து காரிமங்கலம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காரிமங்கலம் காவல் நிலையத்தில் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறிய இரண்டு திருடர்களும் காவல் நிலையத்திலிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளனர். தப்பியோடியவர்கள் ரவி (26), அபிமன்யூ (25) என தெரியவந்துள்ளது.

பாலக்கோடு காரிமங்கலம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கோயில் உண்டியல் உடைப்பு, இருசக்கர வாகனங்கள் திருட்டு போன்றவை நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.வாகனத்தைத் திருடிய இருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் அவர்களை காவல்துறையினர் கோட்டைவிட்டது பொது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய வாகன கொள்ளையர்கள் இருவரையும் காரிமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் காரிமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details