தந்தைப்பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறுது. இவ்விழாவினை முன்னிட்டு பெரியாரின் திருவுருவச்சிலை, திருவுருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர்.
அதன்படி தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தருமபுரி திருப்பத்தூர் சாலையில் உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.