தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக சுற்றுலாத் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஒகேனக்கலில் ஆய்வு!

Hogenakkal: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளைத் தமிழக சுற்றுலாத் துறையின் முதன்மை செயலாளரும் மற்றும் சுற்றுலாத் துறை ஆணையருமான காகர்லா உஷா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Kakarla Usha Inspection Hogenakkal
தமிழக சுற்றுலாத் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஒகேனக்கலில் ஆய்வு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 8:16 PM IST

தருமபுரி: தமிழக சுற்றுலா தளங்களில் மிகவும் பிரபலமானது தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல். இந்த சுற்றுலா தளத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தைச் சர்வதேச அளவில் மேம்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்து அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதன் அடிப்படையில் சுமார் ரூபாய் 17 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் ஒகேனக்கல் பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக 3.10 ஏக்கர் நிலம் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த நிலத்தில் நுழைவாயில், பார்வையாளர்கள் மாடம், பரிசல் நிறுத்தும் இடம், எண்ணெய் குளியலுக்கான இடங்கள், உடைமாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுண்டர், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளைக் கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம், காட்சி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது முதல் கட்டமாக நடைபெற்று வரும் பணிகளை இன்று (டிச 13) தமிழக சுற்றுலாத் துறையின் முதன்மை செயலாளரும் மற்றும் சுற்றுலாத் துறை ஆணையருமான காகர்லா உஷா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி ஒகேனக்கல் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகளைத் தரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த பணிகளை விரைவாக முடித்து சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும் இரண்டாம் கட்டமாகத் தொடங்க உள்ள சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கதிரேசன், ஒகேனக்கல் தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் உதயசங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா; பகல் பத்து முதல் நாள் புறப்பாடு தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details