தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி வெறியை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் - அரசு பள்ளி மாணவர்கள்

தருமபுரி: பென்னாகரம் அரசுப் பள்ளியில் சாதி வெறியை தூண்டும் வகையில் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் எட்டு பேர் மீது, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

provoking caste hysteria

By

Published : Aug 15, 2019, 1:37 PM IST

Updated : Aug 15, 2019, 4:24 PM IST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள், வேறு ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ எடுத்து டிக்-டாக்கில் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் தமிழ்வேல், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள்எட்டு பேர்மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ வெளியிட்ட மாணவர்கள்

இந்நிலையில், சாதி வெறியை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Aug 15, 2019, 4:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details