தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு ரூ.5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக மாணவி ஒருவர் பேசும் வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட மாணவி பள்ளிக்கு எதிரே உள்ள ஏதோ ஒரு கடையில் நின்று தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். அதை ஒருவர் பதிவு செய்ததாகத் தெரிகிறது.
வீடியோவின் சாரம்சம்:
பத்தாம் வகுப்பில் மாணவி பெற்ற மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் குறை கூறுவதாகவும், பள்ளியில் சேர ரூ.5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமின்றி புத்தகங்கள் இல்லை என நொண்டி சாக்கும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, வேறு பள்ளியில் சென்று சேர வேண்டியது தானே எனப் மாணவியை மிரட்டவும் செய்திருக்கின்றனர். தாமதமாக பள்ளியில் சேர வந்ததால் மாணவியை தொடர்ந்து அலைக்கழித்துள்ளனர். பள்ளி பராமரிப்பு முதல் நன்கொடை வரை அனைத்தையும் மாணவியிடம் கேட்டதுடன், வெகுநேரமாக உரிய பதிலளிக்காமல் காக்கவும் வைத்திருக்கின்றனர். அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்ட பின்னரே சேர்க்கை குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் விரக்தியைடந்த மாணவி பள்ளியில் இருந்து வெளியேறியுள்ளார்.
லஞ்சம் கேட்ட அரசு பள்ளி அலுவலர்கள்? அரசு பள்ளியொன்றில் இது போல சம்பவம் நடந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம்! பட்டியல் வெளியிட்ட கமல்!