தர்மபுரி அரசு கலை கல்லூரியில் 2019 முதல் 2021வரையிலான கல்வியாண்டில் பொறுப்பு முதல்வராக இருந்த பாக்கியமணி, புள்ளியல் துறை பேராசிரியராக பணிபுரிந்த திருமுருகனை சாதிய ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருமுருகன், தற்கொலை செய்துகொண்டுள்ளார்
மேலும் உடற்கல்வி துறை இயக்குனராக உள்ள பாலமுருகன், பட்டியலின சமூகத்தை சார்ந்தவர் என்பதால், 2019 மற்றும் 2020ஆம் ஆண்டில், கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு, மாணவர்களை அழைத்து செல்வதற்கான பயண செலவினை அவருக்கு வழங்கவில்லை.
இதுகுறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா, கல்லூரி கல்வி இயக்குனர் மற்றும் தேசிய எஸ்சி, எஸ்டி கமிஷனிடம் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தேசிய எஸ்சி, எஸ்டி கமிஷனில் இருந்து உயர்கல்வி துறை செயலாளர் மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், தருமபுரி அரசு கல்லூரியில், சாதிய ரீதியான பாகுபாடு, பணியாளர்கள் மத்தியில் நிலவி வருகிறதா என்பதை கண்டறிந்து, 15 நாள்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எழுதப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அரசியலமைப்பு புனிதமானது- வெங்கையா நாயுடு!