தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம் சார்பாக தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற 32வது மாநில அளவிலான போட்டிகளில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், சென்னை, திருச்சி, நாகை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1,450க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் திருச்சி மாவட்ட வீரர்கள் அபாரம் ! - takwando competition
தருமபுரி : தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில், வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி
சப்-ஜூனியர், கேடர் என்ற இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின் சார்பில் திருச்சி பயிற்சியாளர் பரணிதேவி தலைமையில் கலந்துகொண்ட வீரர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
மேலும் வெற்றிபெற்ற வீரர்களுக்கு விளையாட்டு விடுதி மேலாளர் ரமேஷ், அணி மேலாளர் சுல்தானு ஆரிபின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.