தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெங்கு காய்ச்சல்: தருமபுரியில் தொடரும் மரணங்கள்! கலக்கத்தில் மக்கள்!

தருமபுரி: பென்னாகரம் அருகே, டெங்கு காய்ச்சலால் மூன்றாம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டெங்கு காய்ச்சலால் மாணவன் மரணம்

By

Published : Oct 19, 2019, 10:25 PM IST

தருமபுரி மாவட்டம், கள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் - மலர்மதி தம்பதியின் மகன் அவினாஷ்(8). இவர் அதேபகுதியில் அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். அக்டோபர் 13ஆம் தேதி இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக உடனடியாக பென்னாகரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை எடுத்துக் கொண்டும், காய்ச்சல் குறையாத காரணத்தால் 16ஆம் தேதி ரத்தப் பரிசோதனை செய்துள்ளனர். அங்கு டெங்கு காய்ச்சல் என உறுதி செய்ததையடுத்து, தனியார் மருத்துவமனை மருத்துவர் தருமபுரி அரசு மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளார்.

திருச்சியில் 230 பேருக்கு டெங்கு அறிகுறி: மாவட்ட ஆட்சியர் பகீர் தகவல்

இதனையடுத்து 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்கள், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். காய்ச்சல் குறையாததால் இன்று, தனியார் அவசர ஊர்தி மூலம், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். அரசு மருத்துவமனை முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால், அவர் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் சடலத்துடன் கள்ளிபுரம் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுப்பட்ட உறவினர்கள்

ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகும்படி இருக்கும் வளாகங்கள் கண்டறியப்பட்டால் சிறைதண்டனை!

அலுவலர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். நேற்று, கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த நிவாஸ் என்ற 5 வயது சிறுவன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாகத்தான் அவர் உயிரிழந்தார் என அவரது பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தருமபுரி மாவட்ட நிர்வாகம், டெங்கு காய்ச்சல் காரணமாக இறக்கவில்லை என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாகப் பொதுமக்கள் சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் மறைக்க நினைக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details