தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கும் இவரது மனைவி கீதாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவந்தது. இதனால் மனமுடைந்த கீதா கடந்த ஜனவரி 30ஆம் தேதி அவரது மகன் கிறிஸ்டோபருக்கு (9) விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார்.
உடற்கூராய்வு செய்ய மறுத்த அரசு மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் - பென்னாகரம் அரசு மருத்துவமனை
தர்மபுரி: பென்னாகரம் அருகே உயிரிழந்த பெண்ணின் உடலை உடற்கூராய்வு செய்யாமல் அலைக்கழித்த அரசு மருத்துவமனையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உறவினர்கள் இருவரையும் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மகன் கிறிஸ்டோபர் மேல் சிகிச்சைக்காகத் தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கீதா, மேல் சிகிச்சைக்காகப் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பெற்றுவந்த அவர் மஞ்சள் காமாலை நோயால் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்-5) உயிரிழந்தார்.
அவரது உடல் உடற்கூராய்வுக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் ஆங்கு பணியிலிருந்த மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்யாமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேமடைந்த பெண்ணின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்து தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.