தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பிக்கிலி பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் மலைப்பாம்பு இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காட்டு விலங்கை உட்கொண்டுவிட்டு விவசாய நிலம் நோக்கி ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை பிடித்து காப்புக்காடு வனப்பகுதியில் விட்டனர்.
விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு மீட்பு விவசாய நிலத்தில் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடந்த ஒரு மாதமாகவே பாலக்கோடு பகுதிகளில் மலைப்பாம்புகள் விவசாய நிலங்களில் பிடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கால்நடைகளுக்கு பரவும் தோல் அம்மை: மருத்துவர்கள் கைவிரிப்பு!