ரம்ஜான் பண்டிகையொட்டி தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஆட்டுசந்தைக்கு பாலக்கோடு, தொப்பூர், சேலம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குறும்பாடு என மூன்று வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்தது.
தருமபுரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்ததன் காரணமாக ஆடுகளுக்கு தீவனமான பசும்புல் அதிக அளவில் கிடைப்பதால் விவசாயிகள் ஆடுகளை வளா்ப்பிற்காக வாங்கிவந்திருந்தனர். இதன் காரணமாக ஆடுகள் விலை உயா்ந்துள்ளது.