தர்மபுரி :ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தின் காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்தது.
நீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக்கருத்தில்கொண்டு, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதித்தார். இன்று 5ஆவது நாளாக, இத்தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடிக்கு குறைவாக இருந்தால் மட்டுமே குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும்.
ஒகேனக்கலில் குளிக்க பரிசல் இயக்க 5ஆவது நாளாக தடை நீட்டிப்பு! தற்போது ஒகேனக்கலில் நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக உள்ளது. அதன் காரணமாக இன்று குளிக்க மற்றும் பரிசல் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்குச் சென்றனர்.
குளிக்கத் தடை அமலில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் பென்னாகரம் அடுத்த மடம் சோதனைச்சாவடியிலேயே சுற்றுலாப்பயணிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். தடை காரணமாக ஒகேனக்கலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர்.
ஒகேனக்கலில் குளிக்க பரிசல் இயக்க 5ஆவது நாளாக தடை நீட்டிப்பு! இதையும் படிங்க :மதுரையில் முனியாண்டி திருவிழா: 470 ஆடுகளை வெட்டி 10 ஆயிரம் பேருக்கு கறிவிருந்து!