தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கும் காய்ச்சல் சிறப்பு சிகிச்சைப் பிரிவை மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேற்று இரவு ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் காய்ச்சல் தொற்று கண்டவர்கள் அவர்களாகவே மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது என்றும், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தருமபுரி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் 60 குழுக்கள் மாவட்டம் முழுவதும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 6 கிராம ஊராட்சிகளில் வாரத்திற்கு ஒருநாள் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிகிச்சை குறித்து கேட்கும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி அதேபோல் தேவையின் அடிப்படையில், மாவட்டத்தில் 11 நடமாடும் மருத்துவக் குழுவினர் கிராம மக்களுக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 255 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆறு மாதத்திற்குத் தேவையான காய்ச்சல் தடுப்பு மருந்துகள் மாத்திரைகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு உள்ளது என்றார்.
இதையும் படிங்க:தருமபுரியில் இடி தாக்கி ஒருவர் பலி; இருவர் படுகாயம்!