தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் திருமணம் மீறிய உறவால் ஏற்பட்ட மோதல்: பாஜக மாவட்ட துணை தலைவர் உட்பட 6 பேரை கைது! - illicit relationship in dharmapuri

Dharmapuri BJP leader Arrest: தருமபுரி அருகே திருமணம் மீறிய உறவு விவகாரத்தில் கனேசன் என்பவரை தாக்கி தலைமறைவாக இருந்த பாஜக மாவட்டத் துணைத் தலைவர் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரியில் பாஜக மாவட்ட துணை தலைவர் உட்பட 6 பேரை கைது
தருமபுரியில் பாஜக மாவட்ட துணை தலைவர் உட்பட 6 பேரை கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 10:53 PM IST

தருமபுரி:கிருஷ்ணகிரி மாவட்டம்காவேரிப்பட்டணம் அருகே கால்வே அள்ளி பகுதியைச் சார்ந்த சின்னசாமியின் மகன் கணேசன் (32) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுது. இருவரும் ஒன்றை ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தமிழரசி, பிரிந்து தருமபுரி அருகே ஒட்டப்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். தொடர்ந்து, ஜருகு ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக மாவட்ட துணை தலைவருமான சிவசக்தி என்பவருக்கும் தமிழரசி இருவரும் பழகி வந்துள்ளனர். நாளடைவில் பழக்கம் இருவருக்கும் திருமணம் வரைச் சென்றது. தமிழரசியை சிவசக்தி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழரசி முதல் கனவரான கனேசனுடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணிகியுள்ளார். இந்த விஷயம் தெரிய வரவே கணேசன் நேரடியாகச் சென்று பேசிக் கொள்ளலாம் என ஒட்டப்பட்டி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது சிவசக்தி மற்றும் அவருடைய நண்பர்கள் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று சேர்ந்து கணேச மீது கடுமையாக கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த கணேசன் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த அதியமான் கோட்டை காவல் துறையினர் ஜருகு ஊராட்சி மன்ற தலைவரும் தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தன் மீது வழக்கு பதிவு செய்து தேடுவதை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி மற்றும் நண்பர்கள் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுப்பாதம் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிவசக்தி மற்றும் அவரது நண்பர்கள் ராஜசேகரன், சரவணன், சித்தநாதன், காவேரி, சதீஸ் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:ஆரூத்ரா மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷ் டிச.10ஆம் தேதி நாடு திரும்பவுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details