தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாமக வேட்பாளருக்குக் கூழ் உணவளித்த கிராமத்துப் பெண்!

தர்மபுரி : கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூழ் உணவளித்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூழ் உணவளித்த கிராமத்துப் பெண்
கூழ் உணவளித்த கிராமத்துப் பெண்

By

Published : Apr 3, 2021, 4:20 PM IST

தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். பி. வெங்கடேஸ்வரன் இன்று(ஏப்.03) இண்டூர் பகுதிக்கு உட்பட்ட இ.கே. புதூர், பாறைகொட்டாய் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில், கடும் வெயிலில் வாக்கு சேகரித்த வேட்பாளருக்கு அக்கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டில் சமைத்த கேழ்வரகு கூழினை உணவாக வழங்கினார். இதுகுறித்துப் பேசிய எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தேர்தல் பரப்புரை காரணமாக காலையிலேயே கிளம்பி வருவதால் உணவு எடுத்துக் கொள்ளவில்லை. உணவளித்த அந்தப் பெண்ணுக்கு நன்றி எனத் தெரிவித்தார்.

கூழ் உணவளித்த கிராமத்துப் பெண்

பின்னர் பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பெண்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் நிதி உதவித்தொகை, ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம், வேளாண் கடன் ரத்து, நகைக் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை பொது மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

இதையும் படிங்க:

'ஊழல் நரகத்தில் சிக்குண்ட தமிழ்நாட்டில் நல்லாட்சி மலரும்' - ஈஸ்டர் வாழ்த்தில் வைகோ நம்பிக்கை

ABOUT THE AUTHOR

...view details