தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் மஞ்சாரள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லமுடி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதியதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
தருமபுரி: செல்லமுடி பகுதியில் முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆனால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனது நிலத்திற்கு அருகாமையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், செல்லமுடி பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யக் கோரியும், ஆழ்துளைக் கிணறு அமைப்பதைத் தடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரைக் கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று (ஆகஸ்ட் 15) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏரியூர் காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.