தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளப்பெருக்கால் உடைந்த பாலம்; தர்மபுரியில் மக்கள் அவதி - வெள்ளம்

தர்மபுரியில் உள்ள பஞ்சப்பள்ளி சின்னார் அணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சக்கிலிநத்தம் ஆற்றுப் பாலம் உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உடைந்த பாலம்
தர்மபுரியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உடைந்த பாலம்

By

Published : Oct 21, 2022, 9:36 PM IST

தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பெய்த மழையால் 4 ஏரியில் உடைப்பு ஏற்பட்டு சின்னாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இந்நிலையில் தர்மபுரியில் உள்ள சின்னார் அணையில் வினாடிக்கு 28,000 கன அடி நீா் திறக்கப்பட்டதால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இரு கரைகளுக்கு மேல் விவசாய நிலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் மூழ்கி அருகில் உள்ள கிராமங்களில் தண்ணீர் நுழைந்துள்ளது.

இதன் காரணமாக பாலக்கோடு வட்டம், சக்கிலிநத்தம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆற்றுப் பாலம் இன்று அதிகாலை உடைந்து சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவத்தினால் சக்கிலிநத்தம் கிராமத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முதல் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஆற்றல் கடந்து செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில் இன்று நீரின் வேகம் அதிகரித்ததால் பாலம் உடைந்து சேதமடைந்ததால் போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்த வருகின்றனர்.

தர்மபுரியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உடைந்த பாலம்

இதையும் படிங்க:அரசு மருத்துவமனை வளாகத்தைச் சூழ்ந்த மழை நீர் - நோயாளிகள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details