தருமபுரி சாலை வினாயகர் கோயில் தெரு பகுதியில் வேலு என்ற நெடுஞ்சாலைத் துறை பணியாளர் தனது செல்போனில் உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் அவரது செல்போனை லாவகமாக பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனை அறிந்த அருகில் இருந்தவர்கள் வடமாநில இளைஞரை துரத்தி பிடித்தனர்.
செல்போன் பறித்த வடமாநில இளைஞர் போலீஸாரிடம் ஒப்படைப்பு! - cellphone thief
தருமபுரி: தருமபுரி நகரப்பகுதியில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த வடமாநில இளைஞர் பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், அந்த இளைஞரை தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் செயல்படும் காவல் நிலயைத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளில் நகை, பொருட்கள் உள்ளிட்ட கொள்ளை சம்பவம் நாள் தோறும் நடைபெற்று வருகிறது.
இக் கொள்ளைச் சம்பவங்களை மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து இதற்கு காரணமானவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் கூடும் இடங்களில் செல்போன் பறித்த வடமாநில இளைஞர், பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டது தருமபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.