தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தகுந்த இடைவெளி இல்லாமல் இயங்கும் கடைகள், முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கு காவல், வருவாய் துறையினர் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை அறிவுறுத்தினர்.
பென்னாகரத்தில் முகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு அபராதம்! - கரோனா அபராதம் வசூல்
தருமபுரி:பென்னாகரம் பகுதியில் முகக்கவசம் அணியாத வியாபாரிகள், வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் விழிப்புணா்வு ஏற்படுத்தி அபராதம் விதித்தனா்.
Penalties for not wearing masks in Pennagaram
இதைத் தொடர்ந்து, முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்கள், வாகன ஓட்டிகளுக்கு நூறு ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும் முகக்கவசம் இல்லாமல் வெளியே நடமாடினால் அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல் வாகனங்களையும் காவல்நிலையத்திற்கு அனுப்ப நேரிடும் என்று வருவாய் மற்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர் .